Avatar author

கட்டபொம்மன்

கட்டபொம்மன் இவர் மதுரை மாவட்டம் சீப்பலாக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர். இணைப்பு பெட்டித் தொழிற்சாலையில் தலைமை எழுத்தாளராக பணியாற்றிய போது INTUC யுகடன் இணைந்த அங்கீகாரம் பெற்ற அகில இந்திய தேசிய இரயில்வே தொழிலாளர்களின் சம்மேளனப் பேரவையின் செயற்குழு உறுப்பினராக இருந்து தொழிலாளர் நலனுக்காக பாடுபட்டவர். தொழிலாளர்கள் மாநாடு பேரவைகளை நடத்தி தொழிலாளர்களின் கோரிக்கைகளடங்கிய சிறப்பு மலர்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் இவருக்கு கட்டபொம்மன் என்ற புனைப் பெயரைச் சூட்டினார். இவர் எழுதிய பயங்கரவாதம் ஒழிய பயனுள்ள யோசனைகள் எனும் அவர் ஜி கே மூப்பனார் அவர்களால் படித்துப் பாராட்டப்பட்டு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு ஜி.கே.வாசன் அவர்களால் வெளியிடப்பட்டது.

Registration

Forgotten Password?