டாக்டர். இந்திரா ஸ்ரீனிவாசன்
டாக்டர். இந்திரா ஸ்ரீனிவாசன்
இவர் அடையாறில் உள்ள பெசன்ட் உயர்நிலைப்பள்ளி மற்றும் தமிழ்நாடு இசைக்கல்லூரி இவைகளில் கல்வியும், இசையும் படித்து மேற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும், அல்ஜீரியாவுக்கும் சென்று முதன் முதலாக நம் இசையைப் பரப்பியவர்.
இசை ஆராய்ச்சி செய்து கலிபோர்னியா யுனிவர்சிட்டி மூலம் டாக்டர் பட்டம் distinction னுடன் பெற்றவர்.
கட்டுரைகள்,கவிதைகள், எழுதுவதுடன் மற்றும் பல்வேறு இதர ஈடுபாடுகள் உள்ளதால் தம் ஓங்கார நாதம் கலைக்குழுவையும் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முடிந்தது.
பல இந்திய மொழிகளும் நான்கு வெளிநாட்டு மொழிகளும் படித்தவர்.
இவருக்கு கல்கத்தாவின் பெருமைமிகு "மைக்கேல் மதுசூதன் விருது" 1997 - ஆம் ஆண்டு செப்டம்பரில் இசை இலக்கியத்திற்காக வழங்கப்பட்டது.