Avatar author

கி.வெங்கடாசலம்

கி.வெங்கடாசலம் & கி.வெ.இராஜராஜன் கி.வெங்கடாசலம் இவர் 1941 இல் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கூடலூர் கிராமத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை அருகில் உள்ள கழக உயர்நிலைப்பள்ளி பெண்ணாடடத்திலும் பட்டப்படிப்பை சென்னை பல்கலைக்கழகத்திலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் முடித்தார். 1966 இல் படிக்க பள்ளியிலேயே கணித ஆசிரியராக பணியில் தொடர்ந்தார். 2000 இல் ஆவினங்குடி அரசினர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் இறைவழி மருத்துவம் அக்குபிரஷர் மருத்துவம் பயின்றார். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மருத்துவ கட்டுரை எழுதி வருகிறார். கி.வெ.இராஜராஜன். இவர் கூடுதல் பேராசிரியர். இயந்திரவியல் துறை, தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றிய இவர் முறையாக திரு.கி. வெங்கடாசலம் அவர்களிடம் இயற்கை மருத்துவமும் யோகாவும் பயின்றவர். இவரும் இயற்கை மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக வழங்கி வருகிறார். இவர் ஒரு இயற்கை பிரியர். தினமும் ஒரு வேலையாவது இயற்கை உணவு உண்ணக் கூடியவர். யோகா பயிற்றுநர்.சிறந்த பேச்சாளர்.பாடல்கள் வடிப்பதிலே வல்லவர்.

Registration

Forgotten Password?