டாக்டர்.வி.எம்.லோகநாதன்
டாக்டர்.வி.எம்.லோகநாதன்
இவர் தமிழக அரசின் கண் மருத்துவதுறையில் 33 ஆண்டுகள் பணியாற்றியவர்.
கண் மருத்துவப் பேராசிரியராக மதுரை மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றியவர்.
சென்னை அரசினர் கண் மருத்துவமனையின் இயக்குனராக ஐந்தாண்டுகள் பணியாற்றினார்.
இராணுவத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றியவர்.
தமிழக அரசின் கண் முகாம்களின் சிறப்பாக பணியாற்றியவர்
அகில இந்திய அளவில் கண் மருத்துவத்திற்கான சி.எஸ். ரேஷ்மி தங்கப்பதக்கம் பெற்றவர்.
தமிழக கண் மருத்துவ சங்கம் இவரது சேவையை பாராட்டி டாக்டர் ஜோசப் ஞானாதிக்கம் தங்கப் பதக்கம் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது.
கண் மருத்துவ மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிப்பது இவரது தனிச்சிறப்பு.
இங்கிலாந்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்திலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் விழித்திரை நோய்களுக்கான சிறப்பு பயிற்சி பெற்றவர்.
தற்போது திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் பேராசிரியராகவும் ஆலோசகராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.