Avatar author

எம்.ரி. செல்வராஜா

எம்.ரி. செல்வராஜா இவர் வட இலங்கையான யாழ்ப்பாணம் உரும்பாராயில் பிறந்தவர். இவர் சிறு வயதிலிருந்து நாடகத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். பல நாடகங்களில் நடித்தவர். ஈழத்து நாடகத் தந்தை கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் பாராட்டுதலைப் பெற்ற பெருமைக்குரியவர். 1973 ஆம் ஆண்டு இலண்டனுக்குச் சென்று B.Sc in civil engineering படித்து முடித்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அங்கு முதன் முதலில் 1979 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலையில் உதவித் தலைமை ஆசிரியராகவும் கிங்ஸ்பெரி தமிழ்ப் பாடசாலையில் உதவி தலைமை ஆசிரியராகவும் கடமையாற்றுகிறார். இவர் ஒரு சமூகத் தொண்டர். லண்டனில் இருந்து வெளிவரும் மேகம் சஞ்சிகையுயின் உதவி ஆசிரியராகவும் இருக்கிறார்.

Registration

Forgotten Password?