ஜு.பீ. வேதநாயகம்
ஜீ.பீ. வேதநாயகம்
இவர் மறை முதல்வன் என்னும் புனைப் பெயரிலும் எழுதுவார்.
இவர் சிறுகதை, கவிதை, திறனாய்வு என நவீன தமிழ் இலக்கியம் சார்ந்த பல்வேறு துறைகளிலும் கால் பதித்துப் பல பரிசுகளைப் பெற்றவர்.
வானொலி மேடை தொலைக்காட்சி பத்திரிக்கை எனச் சகல ஊடகங்களிலும் இவரது நாடகங்கள் நடைபெற்றுள்ளன.
1969இல் இலங்கை வானொலியரால் நடத்தப்பட்ட முதலாவது நாடகப் போட்டியில் இவரது 'நீதியின் நிழலில்' என்ற நாடகம் முதல் பரிசு பெற்றது.
2001 இல் அமுது சஞ்சிகையால் நடத்தப்பட்ட படைப்பாற்றல் போட்டியிலும் இது ஒரு வழிப்பாதை எனும் சமகால நாடகம் முதல் பரிசை தட்டிச் சென்றது.
ஒரு பன்முகத் திறமை கொண்ட மனிதர் இவர்.