Avatar author

எஸ்.கே.டோக்ரா

எஸ்.கே.டோக்ரா இவர் பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் தாரிவால் என்னும் சிற்றூரில் 1953 இல் பிறந்தவர். படிச்சு முடித்து சுமார் ஐந்து வருடங்களாக அமிர்தஸரஸிலுள்ள குரு நானக் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் மொழியியல் விரிவுரையாளராகப். பணியாற்றியவர். 1982 இல் இந்திய காவல் பணியில் ( IP$ )சேர்ந்த இவர் தேசிய அளவிலான பயிற்சிகளை முடித்துக் கொண்டு 1984 இல் தமிழ்நாட்டின் பணியமர்த்தப்பட்டார். அப்பொழுதுதான் தமிழ் மொழி கற்றுக் கொள்ள ஆரம்பித்து மூன்று - நான்கு ஆண்டுகளில் தமிழ் சிறப்பாக கற்றுக்கொண்டு தமிழ் பத்திரிகைகளில் கதை கட்டுரை மற்றும் கவிதை போன்ற இலக்கிய ஆக்கங்களை எழுதத் தொடங்கினார். இவரது முதல் தமிழ் நூல் 'குடும்பமே கோயில்' என்பதாகும்.

Registration

Forgotten Password?