செல்வி இரா. கோதாமணி
செல்வி இரா.
கோதாமணி
செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்வியை தொடங்கியவர் சிறுவயதிலேயே தன்னுடைய தமிழாற்றலை வளர்த்துக்கொண்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்புகளில் பயிலும்போதே மாவட்ட அளவிலான கட்டுரை போட்டிகளில் இருமுறை கலந்து கொண்டதோடு இருமுறையும் வெற்றி பெற்று மாவட்ட ஆட்சியர் திருமதி.கஜலட்சுமி அவர்களால் பாராட்டப் பெற்றார்.
திரு நெல்லை பாலு அவர்களின் நிறுவனம் மூலம் 'யுவஸ்ரீ கலாபாரதி' என்ற விருதையும் பெற்றார்.
கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் இவர் தமிழ் வழியில் பயின்றவருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் காமராசர் விருதையும் ரூபாய் 10 ஆயிரத்துக்கான காசோலையையும் பெற்றவர்.