K.R.P.மணிமொழிச்செல்வன்
K.R.P.மணிமொழிச்செல்வன்
தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தைச் சேர்ந்தவர்.
இவருடைய இளமைக்காலத்திலேயே ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்வாகி 1978 இல் தமிழ்நாடு அரசால் சென்னையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் உடனடித் தலைப்பில் பங்கெடுத்து முதல் பரிசு பெற்றுள்ளார்.
புகழ்மிக்க ஆலயங்களில் சமய சொற்பொழிவு செய்து வருவதை பாராட்டி திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி அவர்களால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆன்மீகத் தென்றல் பட்டம் சூட்டப்பட்டவர்.
மேலும் சொல்லின் செல்வர் விருது, சிறந்த சமூக ஆர்வலர் விருது, மகாகவி பாரதி விருது, ஆன்மீகச் செம்மல் விருது, கவிமுகில் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது,
நிமிட கவி விருது, பெருந்தலைவர் காமராசர் கவிப் போராளி விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.