Dr.G.ராஜா
Dr.G.ராஜா
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகில் பேரூர் எனும் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் இவர். அரசுப் பள்ளியில் முதல் மாணவனாகத்தேர்வு.
பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராக தாவரவியல் பட்டம் பெற்ற பின்பு சென்னையில் உதவி பேராசிரியர் பணியை தொடங்கி...
படிப்படியாக M.phil மற்றும் ph.d பட்டங்களை பெற்று பேராசிரியராகவும் பணியாற்றி -
ஓய்வு பெற்ற பின்னர் மூன்று கல்லூரிகளில் முதல்வர் பாலி டெக்னிக் ஒன்றில் தாளாராகவும் பணிபுரிந்தார் .
பணியில் இருக்கும் போதே சுற்றுச்சூழல் மீது அதிக கவனம் செலுத்தி பசுமை பூமி இயக்கம் என்ற தொண்டு நிறுவனத்தை
உருவாக்கினார்.
இதன் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கருத்தரங்குகள்,மாநாடுகள், கல்லூரி விழாக்கள்,கோவில், பொது நிகழ்ச்சி, பொதுக்கூட்டங்கள் போன்றவற்றிக்கு தானே எழுதி இசையமைத்து அனைவருக்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.