அருள்நிதி, புலவர் இராம.ராஜாராம் சுடலைமுத்து
அருள்நிதி, புலவர் இராம.ராஜாராம் சுடலைமுத்து
இவர் திருநெல்வேலி மாவட்டம் பச்சையாற்றின் அடை கரையில் உள்ள தேவநல்லூரில் 1938 இல் பிறந்தவர்.
இவர் பாளையங்கோட்டையில் வாழ்ந்த சைவப் பேரறிஞர் சி. சு.மணி என்ற சித்தாந்தப் பேரறிஞரிடம் சைவ சித்தாந்தப் பாடம் மற்றும் பிற தத்துவ தரிசனங்களைக் கற்றுப் பல் சமய அறிஞரானார்.
1958 ல் பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில்
புதுமுக வகுப்புத் தேறியதும் தமிழக அரசு அலுவலராகப் பணி கிடைத்தமையால் படிப்பை நிறுத்த வேண்டிய சூழ்நிலை.
நேர்மையும், தூய்மையும் நிறைந்த பணியாளர் என பெயர் பெற்றவர்.
நெல்லை தனித்தமிழ் இலக்கியக் கழகத்தால் நடத்தப் பெற்ற புலவர் கல்லூரியில் பயின்று மதுரை பல்கலைக்கழகத் தமிழ்ப் புலவர் பட்டத்தைப் பெற்றார்.
'திருக்குறள் அகவல்' என்னும் சந்தக் கண்ணிகளால் இரண்டடிக்கு இரண்டடி உரை நூலும் வரைந்துள்ளார்.