முனைவர்.பி.சிவலிங்கம்
புலவர், முனைவர் சி.சிவலிங்கம்.
இவர் நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பள்ளிகளில் தமிழாசிரியராகவும்,தாளாளராகவும் பணிபுரிந்தவர்.
உலகத் தமிழ்ச் சங்கம் உருவாக்கி அதன் மூலம் தமிழ் இலக்கிய தொண்டாற்றியவர். கவிதை,கட்டுரை,நாடகம் என அரிய நூல்களைப் படைத்து அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தவர்.
கவியரங்கம், பட்டிமன்றம் என்று எண்ணற்ற மேடைகளில் தமிழை பொழிந்தவர்.
பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ள இவர் "நெய்வேலிக் கம்பன்" என்ற பாராட்டை பெற்றவர்.