Avatar author

என்.சி.மோகன்தாஸ்

என்.சி.மோகன்தாஸ் இவர் 1959 ஆம் ஆண்டு திருச்சி லால்குடி அடுத்த நம்புக் குறிச்சி கிராமத்தில் பிறந்தவர். உள்ளூரில் பள்ளிப்படிப்பை முடித்து திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி ( இராசயணம் ) படித்தார். பின்னர் குவைத் நேஷனல் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணியாற்றினார். குவைத்தில் "இந்தியன் பிரண்ட்லைன்ஸ்" என்று அமைப்பைத் தோற்றுவித்து பல்வேறு சமூகப் நற்பணிகள் ஆற்றியுள்ளார். கலை இலக்கியத்துறை சேர்ந்த பிரபலங்களை குவைத்திற்கு அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலமும் நற்பணிகள் செய்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் இவரது சேவை அளப்பரியது. இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். எண்ணற்ற நாவல்கள்,குறு நாவல்கள், தொடர்கள்,கதைகள் சிறுகதைகள் எழுதியுள்ளார். உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இதுவரை யாருக்கும் வழங்கப்படாத குவைத் தூதரக விருது வழங்கப்பட்டது. அன்புப் பாலம் அமைப்பு கேடயம் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவித்தது. முல்லைச் சரம் விருது, இலக்கிய வீதி விருது, போன்ற பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருக்கிறார். சமீபத்தில் (2024) கவிதை உறவு இலக்கிய அமைப்பு இவருக்கு "எழுத்துச் செல்வர்" பட்டம் வழங்கி கௌரவித்தது.

Registration

Forgotten Password?