பாவலர் சீனி.சுந்தரமூர்த்தி
பாவலர் சீனி.சுந்தரமூர்த்தி
இவர் 1946-இல் திருவண்ணாமலையில் பிறந்தவர்.
செம்பியன்,கோதை,எழில் இறைவன் என்ற புணை பெயர்களில் கவிதைகளையும், கட்டுரைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும்,
திறனாய்வுரைகளையும் 1959 முதல் தொடர்ந்து எழுதி வருகிறார்.
இவர் பள்ளி உதவியாசிரியர், முதல் நிலை ஆசிரியர், தலைமை ஆசிரியர் என அரசினர் உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி என 2004 வரை பணியாற்றி பணி நிறைவு பெற்றவர்.
பல அமைப்புகளில் கவியரங்கம்,கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றில் கலந்து கொண்டு தனது பணிகளை தொடர்ந்து ஆற்றி வருகிறார்.