கவிஞர் கா.கருப்பையா
கவிஞர் கா.கருப்பையா
இவர் சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தில் பிறந்தவர் .
சிவகங்கை அரசர்
துரை சிங்கம் நினைவுக் கல்லூரியில் படித்தவர். வருவாய் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றி துணை ஆட்சியராக ஓய்வு பெற்றவர்.
200க்கும் மேற்பட்ட மெல்லிசை பாடல்கள், கவியரங்க கவிதைகளை படைத்தவர்.
இதுவரை 13 சிறுகதைகள், 25 நாடகங்கள், மற்றும் 6 நூல்களையும் படைத்துள்ளார்.
மேலும் வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார்.
இவரின் எழுத்து பணியைப் பாராட்டி இவருக்கு அறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவர் உலக திருக்குறள் பேரவையால் கௌரவிக்கப்பட்டார்.