கலியராஜன்
கலியராஜன்
இவர் 1933 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்தவர்.
இவரது இளமைக் காலம் முழுவதும் செட்டிநாட்டு ஊர்களிலேயே கழிந்தது.
பள்ளிப் படிப்பை முடித்து இவர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் படிக்கும் காலத்தில் நமது முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் அவர்களும், எழுத்தாளர் சுஜாதா அவர்களும் இவருடன் சக மாணவர்களாக, ஒரு சாலை மாணவர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவுடன் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக பணியில் அமர்ந்தார். உடுமலை அமராவதி அணைக்கட்டுத் திட்டத்தில் இவரது பங்கு பெரியது.
1991 இல் ஓய்வு பெற்ற இவர் இதுவரை 12 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.