திருமதி. சந்திரகாந்தா முருகானந்தன்
திருமதி.சந்திரகாந்தா முருகானந்தன்
இவர் இலங்கைப் பெண் எழுத்தாளர்களின் குறிப்பிடத் தகுந்த ஒரு பெண்ணிய எழுத்தாளர்.
இவர் சமுதாய நோக்கில் எழுதி வருவதால் இவரது படைப்புகள் வாசக,வாசிகளை அதிக அளவில் கவர்ந்துள்ளது.
கிளி நொச்சியில் உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனத் தலைவியாக தனது சமூகப் பணிகளை ஆரம்பித்த இவர் தொடர்ந்து முதியோர் இல்லம், சிறுவர்களின் விடுதி என சேவையை விரிவு படுத்தி உள்ளார்.
சேவை குணமுள்ள இவரது கவிதை,கதை,கட்டுரைகளை இலங்கையின் புகழ்பெற்ற முண்ணனி பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.
பெண்களின் பிரச்சனைகள், பெண்களின் விழிப்புணர்வு போன்ற நூல்களை தொடர்ந்து எழுதி வருகிறார்.