Avatar author

முனைவர் சுதா வெங்கடேஸ்வரன்

முனைவர் சுதா வெங்கடேஸ்வரன் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவில் மாநகரில் பிறந்தவர். இவர் B.com, M.B.A படித்து பின்பு M.Phil ( மகளிர் கல்வி ) சேர்ந்து வங்கியில் பணிபுரியும் பெண்களுக்கு தலைமைத்துவ பாணிகளை பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியின் கணினி பட்டப் படிப்பு பயிற்சி மையத்தின் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தன்னை பொதுவாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டு இன்னர்வீல் சங்கத்தின் தலைவியாக பொறுப்பேற்று பல நற்பணிகள் செய்து வருகிறார். குறிப்பாக ஆதிதிராவிட மக்களுக்கு நூலகத்தை அமைத்து,மன வளர்ச்சி குன்றிய, செவித்திறன் குறைந்த மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, இரண்டு அரசு பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களைக் கொடுத்து உதவியுள்ளார். இவர் ஒரு பெருமாள் பக்தை.

Registration

Forgotten Password?