Dr.Maj.மொ.முத்துசாமி
Dr.Maj. மொ.முத்துசாமி
இவர் சரித்திர நாவல்கள் மட்டும் அல்லாமல் சமூக நாவல்களும் எழுதும் வல்லமைப் பெற்றவர்.
சேலம் அரசினர் பொறியியல் கல்லூரியில் கட்டடக்கலை பயின்றவர்.
மேலும் குஜராத்தில் சட்டமும் டெல்லியில் எம்.பி.ஏ..,வும் மேற்குவங்கத்தில் மருத்துவமும் பயின்று தேர்ச்சி பெற்றவர்.
இந்திய ராணுவத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி மேஜராக ஓய்வு பெற்றவர்.
பிரசித்தி பெற்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பல முக்கிய பதவிகள் வகித்தவர்.
சரித்திர,சமூக, கணித நூல்கள் மட்டுமின்றி இவர் எழுதிய "நமக்கு ஏற்படும் நோய்களும் தீர்வுகளும்" என்னும் மருத்துவ நூல் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் சிறந்த மருத்துவ நூலென்று பாராட்டப்பட்டு பதக்கமும், சான்றிதழையும் பெற்றது.