Avatar author

அன்புமணி

அன்புமணி இவர் இலங்கையில் ஆரையம்பதி என்ற ஊரில் பிறந்தவர். இலங்கை நிர்வாக சேவை அதிகாரி,உதவி அரசாங்க அதிபர் ,தலைமையக உதவி அரசாங்க அதிபர்,ஆளுநரின் சிரேஷ்ட உதவி செயலாளர் முதலான பொறுப்பு வாய்ந்த நிர்வாகப் பதவிகளை வகித்து 1995இல் ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின் கலை, இலக்கியப் பணிகளில் மேலும் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். சிறுகதை,கவிதை, கட்டுரை, நாவல், நாடகம்,விமர்சனம் முதலிய துறைகளில் முத்திரை பதித்தவர். 'திரைகடல் தீபம்' நாடக எழுத்துப் பிரதிக்கு இலங்கைக் கலைக் கழகத்தின் முதல் பரிசு பெற்றவர். வானொலி நாடகங்களை எழுதியவர். பல விருதுகளை பெற்றவர். பல இலக்கியப் பணிகளை ஆற்றியுள்ளார்.

Registration

Forgotten Password?