அழகு சக்தி குமரன்
அழகு சக்தி குமரன்
இவர் 1948 இல் கோவில்பட்டியில் பிறந்தவர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பி.எஸ்.சி மற்றும் பி.எட் பட்டம் பெற்றார்.
இவர் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் எழுத்தாளர் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவாளர்.
இவருக்கு கவிச்செல்வர், கவி முகில், கவித்தென்றல்,தமிழ் வள்ளல்,மனிதநேய செம்மல், பாரதி பணிச்செல்வர், பாவேந்தர் நெறிச் செம்மல் இலக்கிய சுடர் மணி போன்ற பட்டங்கள் கிடைத்துள்ளன.
கவிமாமணி விருது, பொற்கிழி கவிஞர் விருது, மறைமலை அடிகளார் விருது, உவமைக் கவிஞர் சுரதா விருது, டாக்டர் மு.வரதராசனார் விருது, திருவள்ளுவர் இலக்கிய விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.