Avatar author

றூபி வலன்ரீனா பிரான்சிஸ்

றூபி வலன்ரீனா பிரான்சிஸ் இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு ஒளியின் தீவில் பிறந்தவர். இளங்கலைமாமணிப் பட்டப்படிப்பை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு தமிழ் சிறப்புக் கற்கை நெறியில் முதலாம் வகுப்பில் சித்தியடைந்ததுடன் தனது முதுத்துவமாணிப் படிப்பினை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நிறைவு செய்தார்‌ தற்போது அப்பல் கலைக் கழகத்தின் மொழித்துறைஅ தலைவராகப் பணியாற்றுகிறார். இவர் சிங்கப்பூர்,மலேசியா, லண்டன் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தவர். சிறுகதை,கவிதை ஆகிய துறைகளில் ஆர்வமுடைய இவரது ஆக்கங்கள் பல இதழ்களில் வெளிவந்துள்ளன. 1981 இல் கமலாதேவி நித்தியானந்தன் நினைவு பரிசினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது. இழுத்துப் பூதந்தேவனார் கழகம் செம்மொழிப் புலமையாளர் எனும் விருதினை 2008 இல் இவருக்கு வழங்கி கௌரவித்தது. இவர் தன்னை சமூகப் பணிகளில் ஈடுபடுத்தி உள்ளார்.

Registration

Forgotten Password?