Avatar author

என்.சி. இராமலிங்கம்

என்.சி.இராமலிங்கம் இவர் வேலூர் மாவட்டம் நரியம்பட்டி கிராமத்தில் 1940 ஆம் ஆண்டு பிறந்தார். சிறந்த விளையாட்டு வீரராகவும் கல்வியில் முதன்மையுடன் ஏராளமான பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவர். எம்.எஸ்.சி எம்.பில்., பட்டம் பெற்று வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி 1961 ஆம் ஆண்டு முதல் முதுகலை கணிதப் பேராசிரியராக 38 ஆண்டுகள் பயனாய் பணியாற்றி 1998 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் எழுதியுள்ள 'ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் ஆன்மீகம்' மற்றும் 'பெருகிவரும் நீரிழிவு நோயும் விழிப்புணர்வும்'ஆகிய நூல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. சென்னையில் நடந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நல்மாமணிகளுக்கு விருது வழங்கும் விழாவில் சிறந்த நூலாசிரியருக்கான விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

Registration

Forgotten Password?