Avatar author

ஆர்னிகா நாசர்

ஆர்னிகா நாசர் இவர் 1960 இல் மதுரை கோரிப்பாளையத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் வி.ச. நாசர். முதலில் ஆரம்பப் படிப்பையும், உயர்நிலைக் கல்வியை திண்டுக்களிலும் பூண்டி புஷ்பம் கல்லூரியில் அறிவியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை பெற்றவர். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளராக பணியாற்றினார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர். இவர் சிறுகதைகள், நாவல்கள், கிரைம் நாவல்கள் எழுதியுள்ளார். இஸ்லாமிய மார்க்க நூல்கள் இஸ்லாமிய நீதிக்கதைகளையும் எழுதி இருக்கிறார். தமிழ் மாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

Registration

Forgotten Password?