Avatar author

முனைவர் ஞானம்

முனைவர் ஞானம் இவர் 1961இல் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர். தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பயின்று பி.லிட்., எம்.ஏ., எம்.ஃபில்., ஆகிய பட்டங்களையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., பட்டத்தையும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பட்டத்தையும் பெற்றார். :தமிழ் நாடகக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூல் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குட்பட்ட தன்னாட்சிக் கல்லூரிகளும் பி.லிட்., பி.ஏ தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டுக்குரிய விருப்பப்பாடமாக வைக்கப்பட்டுள்ளது. கவியரங்கம்பட்டிமன்றம், இன்னிசை பட்டிமன்றம், வழக்காடு மன்றங்களின் வாயிலாக மேடையில் தமிழ் பரப்பும் இவர் சன் தொலைக்காட்சி மற்றும் தமிழன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவர் மயிலாடுதுறை மற்றும் விழுப்புரத்தில் உள்ள கலை இலக்கிய அமைப்பினர் வழங்கிய "செந்தமிழ் முரசு" "நகைச்சுவை நாவலர்" ஆகிய சிறப்புப் பட்டங்களைப் பெற்றவர்.

Registration

Forgotten Password?