எம்.சுப்ரமணியம்
எம்.சுப்ரமணியம்
இவர் பள்ளிப் ருவத்திலேயே நண்பர்களுடன் இணைந்து மலரும் உள்ளம் என்ற மாணவர் மாத இதழை அச்சிட்டு வெளியீடு செய்தவர்.
இவரது ஆரம்பகால வாழ்க்கையில் தற்காலிகத் தமிழாசிரியராக பணி புரிந்தவர்.
ரப்பர் செம்பனை தோட்டத்துறையில் பல ஆண்டுகள் மேலாளராகப் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்று எழுத்துப் பணியை தொடங்கினார்.
மலேசியத் தமிழ் நாளதழ்களிலும் வார,மாத இதழ்களிலும் சிறுகதைகள், கட்டுரைகள், புதுக்கவிதைகள், திறனாய்வுகள் என்று இவரது படைப்புகள் பிரசுரம் ஆகியுள்ளன.
சிங்கை மலேசிய வானொலிகளிலும் இவரது நகைச்சுவை நாடகங்களும், சிறுவர் நாடகங்களும், சமூக நாடகங்களும் ஒலிபரப்பாகியுள்ளன.
1997 ஆம் ஆண்டில் மலேசியப் படைப்பாக சிங்கப்பூர் தொலைக்காட்சியில் இவரது நாடகமான 'டாக்டர் காயத்ரி' ஒளிபரப்பாகி பலரது பாராட்டைப் பெற்றது.