விடியல் வீரா
விடியல் வீரா
இவர் தேனி அருகே பூதிப்புரம் எனும் சிற்றூரில் பிறந்தவர்.
பொறியியல் துறையில் பட்டய படிப்பு முடித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி மின் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
வார,மாத இதழ்களில் ஏராளமான கவிதைகள் சிறுகதைகள் எனத் தொடர்ந்து எழுதி வருபவர்.
பல்வேறு அமைப்புகள் வெளியிட்ட கவிதை நூல் தொகுப்புகளில் கவிதை எழுதி பாராட்டப் பெற்றவர்.
சிறுகதைச்செம்மல், கவிச்செம்மல், தமிழ் நம்பி, கவி முரசு மற்றும் இலக்கியத்திற்கான சமூக சேவை விருது எனப் பல்வேறு விருதுகளை பல்வேறு அமைப்புகள் மூலம் பெற்றவர்.