Avatar author

கவிஞர் தமிழ் மறவன்

கவிஞர் தமிழ் மறவன் இவர் பர்மா தேசமான மியான்மரில் பிறந்தவர். 1964ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பிய இவர் பள்ளிப் படிப்பை மதுரை மாவட்ட அரசு மாநகராட்சிப் பள்ளியில் படித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ.. எம்.ஏ (தமிழ்) முடித்தார். 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுத் துறையில் பணியாளராக இணைந்தார். கள அலுவலர், மாவட்ட அலுவலர் போன்ற பதவிகளில் பல மாவட்டங்களில் பணிபுரிந்தார். இறுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணி ஓய்வு பெற்றார். 25 வருடங்களுக்கு மேலாக மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி தொடரில் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் எழுதி ஏக்கி நடித்த இரண்டு மேடை நாடகங்கள் தமிழகம் எங்கும் 2000-க்கும் மேற்பட்ட மேடைகளை கண்டுள்ளது.

Registration

Forgotten Password?