கீழை சீனா தானா
கீழை சீனா தானா
கீழை சீனா தானா என்று அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் சையது அப்துல் காதர்.
இவர் துபாய் இந்தியத் தொழிலதிபர்களில் குறிப்பிடத்தக்கவர்.
தற்போது "ஸ்கை குரூப் ஆஃப் கம்பெனிஸ்" என்னும் பெயரில் தொழில் நிறுவனங்களை ஸ்ரீலங்கா,அமெரிக்கா, எமிரேட்டில் நிறுவி எண்ணற்ற நபர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கின்றார்.
இவரது நிறுவனங்கள் சர்வதேச அளவில் சிறப்புற்று விளங்கி வருவதால் சிறந்த சர்வதேச தொழில் வணிகராகப் புகழ் பெற்றுள்ளார்.
இந்தியாவில் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வதோடு, வேலை வாய்ப்பு தரக்கூடிய கல்லூரிப் படிப்பை உருவாக்குவதும் இவரது நோக்கம்.
மேற்படிப்பில் சிறந்த 1500 மாணவர்களுக்கு உதவி செய்துள்ளார்.