Avatar author

கே.எம். சங்கரநாராயணன்

கே.எம். சங்கரநாராயணன் இவர் 1936-ல் பாலக்காடு மாவட்டம் இன்றைய ஒற்றப் பாலம் தாலுகா ஞாளாங் குறிச்சியில் பிறந்தவர். இவர் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்று தேர்ச்சி பெற்ற பின் காயிதே மில்லத் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் படித்து பி.யு.சி. தேறினார். பள்ளியில் மாணவர் மன்ற தலைவர்களின் ஒருவராக இருந்தார். மன்றத்தில் கல்கண்டு பத்திரிகை ஆசிரியர் திரு.தமிழ்வாணன் அவர்களையும் அழைத்து வந்து பேச வைத்தது முக்கியமான நிகழ்வாகும். 1956 இல் இவருக்கு மத்திய கலால் வரி இலாகாவில் கண்காணிப்பு ஆய்வாளராகப் பணி கிடைத்தது. பல இடங்களில் பணிபுரிந்த பின் 1984 இல் கண்காணிப்பு அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். 1994 ஆம் ஆண்டு சென்னையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

Registration

Forgotten Password?