கவிஞர் க.காமராஜ்
கவிஞர் க.காமராஜ்
இவர் 12 ஆம் வகுப்பிற்கு மேல் கல்வியைத் தொடர வசதி இல்லாமல் தன் சகோதரருக்கு மும்பைக்குச் சென்று தனியார் சூதாட்டக் கம்பியின் சேர்ந்து வேலை செய்து ஆங்கில தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தையும் தானாகவே படித்து மூன்றாண்டுகள் கழிந்த பின்
மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்து விருத்தாச்சலம் திரு. கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியின் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயின்று முதல் மாணவனாகத் தேர்வு பெற்று அங்கேயே முதுகலைத் தமிழ் இலக்கியத்தில் சேர்ந்து படித்துக் கொண்டு இருக்கையில் மேற்கத்திய இரயில்வேயில் பணியில் சேர்ந்து மீண்டும் சென்னை இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலம் தேர்வு பெற்று அதே பணியில் தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி தென்னக இரயில்வேயில் சேர்ந்தார். இவர் அதிகமான
மேற்படிப்புகள் படித்துள்ளார்.
இவருடைய 34 ஆண்டு கால சேவையை பாராட்டி பணி புரியும் காலத்தில் மிகவும் சிறப்பான விருதாக கருதப்படும் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் இரயில்வே வார விருதினை ஏறக்குறைய 10 ஆண்டுகள் இவருக்கு வழங்கி இரயில்வே துறை இவரை சிறப்பித்துள்ளது.