தென்காசி எஸ். தங்க ராஜா
தென்காசி எஸ். தங்க ராஜா
இவர் கல்வியில் ஆசிரியர் பயிற்சி பட்டயம் பெற்றவர்.
கேரளா பத்தனம் திட்டாவில் ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
தற்போது ஓய்வு பெற்ற பின் தென்காசியில் வாழ்ந்து வருகிறார்.
பல வார இதழ்கள், மாத இதழ்கள், பல தொகுப்பு நூல்களிலும் இவரது கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
திருநெல்வேலி அகில இந்திய வானொலியிடம் உரையாற்றி இருக்கின்றார்.
இவர் எழுதிய வந்துவிட்டாள் புரட்சிப்பெண் என்ற கவிதை நூலை அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் சிறந்த நூலாக தேர்வு செய்து சான்றிதழும் விருதும் வழங்கி பாராட்டி இருக்கிறது.