தமிழ்மணி த.கனகரத்தினம்
தமிழ்மணி த.கனகரத்தினம்
இவர் பன்முகப் பார்வை கொண்ட பன்மொழிப் புலவர்.
இவர் இலங்கை யா. கீரி மலையைச் சேர்ந்தவர். இவர் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழி வல்லுநர்களுள் முக்கியமானவர்.
தமிழ், சிங்களம்,சமஸ்கிருதம், பாளி,ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழியில் புலமை பெற்ற இவர் தமிழ் மொழியை சிறப்புடன் கற்று அதன் மரபுகளையும் காப்பிய மரபுகளையும் நன்கு அறிந்துள்ள ஒரு தமிழறிஞர்.
இவர் அச்சு ஊடகம் இலத்திரனியல் ஊடகங்களுக்கு பெரும் பங்களிப்பை செய்திருக்கிறார்.
80 வயதை தாண்டி விட்ட நிலையிலும் இவர் தமிழ்ப் பணியை ஓயாமல் ஆற்றி வருகிறார்.