கவிஞர் முனைவர் ரத்னமாலா புரூஸ்
கவிஞர் முனைவர் ரத்னமாலா புரூஸ் - முனைவர் M.மரிய ஜெயின் ப்ரூஸ்
இவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலைச் சார்ந்தவர்கள்.
பேராசிரியர்களான இவர்கள் எழுத்தாளர்கள் என்பது மட்டுமின்றி தங்களது பேச்சுகளால் பல்வேறு மேடைகளை அலங்கரித்து வருபவர்கள்.
அரிய தகவல்களை அள்ளித்தரும் இவர்களின் படைப்புகளான 'ஒரு நிமிடம் ஒரு தகவல்' என்னும் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் சமூக வலைதளங்களான யூ ட்யூப், முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் மிகப் பிரபலம்.
இவர்கள் அமர்ஜோதி கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை என்னும் அமைப்பினை உருவாக்கி ஏழை எளிய மக்களுக்கு உணவு கல்வி மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்து வருகின்றனர்.