கனி விமலநாதன்
கனிவிமலநாதன்
இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். பட்டப் படிப்புகள் எல்லாம் முடித்து தற்போது கனடாவில் வசிக்கிறார்.
தாயகத்தில் உயர் வகுப்பினருக்கு கணித, பௌதிக ஆசிரியராக கடமையாற்றிய இவர் கனடாவில் மோட்டார் உதிரிப் பாகத் தயாரிப்புத் தொழிற்சாலையில் தர பரிசோதகராகக் கடமையாற்றியவர்.
தமிழில் அதிக பற்றுடைய இவர் தனது 13 வது வயதிலேயே கையெழுத்துப் பிரதிகளை எழுதத் தொடங்கி பிரபலமானவர். இவர் ஒரு விஞ்ஞானச் சிந்தனையாளர்.