டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா
டாக்டர் கே.எஸ்.அன்வர் பாட்சா
இவர் திருப்பத்தூரைச் சேர்ந்தவர்.
மாணவப் பருவத்தில் தமிழ் உணர்வு,இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமான பங்கேற்பு,மற்றும் கலை இலக்கியத்தில் ஆர்வம், சமுதாய அரசியலில் ஆர்வமும் கொண்டவர்.
முஸ்லிம் லீக்கின் அதிகாரப்பூர்வ வார ஏடான உரிமைக் குரலில் அரசியல் பிரிவு எழுத்தாளராக பத்து ஆண்டுகள் பணி புரிந்தவர்.
சமுதாயக் குரல் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
ஹோமியோபதி மருத்துவம் பயின்ற இவர் டாக்டர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர்.
இவர் ஏற்றுக் கொண்ட ஒரே அரசியல் தலைவர் "காயிதே மில்லத்" அவர்கள்.