Avatar author

முனைவர் சி.ஆறுமுகம்

முனைவர் சி.ஆறுமுகம் இவர் கடலூர் மாவட்டம் வளையமாதேவி என்ற ஊரில் பிறந்தவர். தனது கல்வியை முறையே பெரிய குப்பம் எனும் கடற்கரைக் கிராமத்திலும் நெய்வேலியிலும் நிறைவு செய்தவர். இவர் பி.ஏ மற்றும் எம்.எ பட்டங்களைப் பெற்றவர். முதுகலை வகுப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்க பதக்கமும் வென்றவர். நெய்வேலியில் ஆசிரியராக பணியைத் தொடங்கியவர் சிங்கப்பூரிலும் பல காலம் பணியாற்றியவர். திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சிங்கப்பூரில் உள்ள தமிழவேள் நாடக மன்றம் இவருக்குக் "கவிதைத் தென்றல்" எனும் விருதை வழங்கி சிறப்பித்துள்ளது.

Registration

Forgotten Password?