Avatar author

பாலா சிவசங்கரன்

பாலா சிவசங்கரன் இவர் 1968 இல் காஞ்சி மாநகரில் பிறந்தவர். காவேரிப்பாக்கத்தில் பள்ளி படிப்பை முடித்து சேலம் அரசு குறியியல் கல்லூரியில் இயந்திரவியலும்,சென்னை Great lakes institute of Management இல் மேலாண்மையில் பயின்றுள்ளார் தற்போது சென்னையில் கணினி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். பள்ளிப் பருவத்திலே கவிதைகள் எழுதுவார். தமிழ் மீதான ஆர்வத்தால் கணினித் துறை நண்பர்கள் பலருடன் இணைந்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான உழைப்புகளின் ஈடுபட்டு வருகிறார். தமிழ் மொழியை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வது-அதன் வளர்ச்சிக்கான முதல் பணி என்பதை உணர்ந்து பிள்ளைப்பா மழலை பாடல்களை நண்பர்கள் உதவியுடன் வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் சுஜாதா,கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோர் நடத்திய கவிதைப் போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளார். தினமலர் வாரமலரின் 2017 ஆம் ஆண்டுக்கான சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார்.

Registration

Forgotten Password?